பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மின் கலத்தொகுதியினை வவுனியாவில் திறந்து வைத்த அமைச்சர் றிஷாட்,ரவி

வவுனியா எட்டம்பகஸ்கட பகுதியில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதியினை அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, றிஷாட் பதியுதீன் அவர்களும் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.
சூரிய மின்சக்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் வின்போஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து நாளாந்தம் ஏழு ஆயிரம் வோல்டேஜ் மின்சக்தி உற்பத்திசெய்யபடும்.

பெறப்படும் மின்சக்தியானது இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டு தேசிய ரீதியில் பயன்படுத்தப்படுகிறது. 360 மில்லியன் ரூபா செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கைத்தொழில் வர்த்தகம், நீண்ட கால அகதிகளை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் கலந்து கொண்டு சூரிய மின்கலத் தொகுதியின் கட்டிடத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர் முத்துமுகமது, அப்துல் பாரி, உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

நல்லாட்சியை தோற்கடித்து, இந்த கள்ளாட்சி, பதவிக்கு வந்தது.

wpengine

தாக்கப்பட்ட சாய்ந்தமருது! பாதுகாப்பு கடமையில் பொலிஸ்

wpengine

முசலி பிரதேசத்தில் சமூர்த்தி காடு வளர்த்தல் வேலைத்திட்டம்.

wpengine