அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மின் கட்டணத்தைக் கூட்டவோ, குறைக்கவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் பொது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் எதிர்காலத்தில் கூடுமா? குறையுமா என்பதைக் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. ஏனெனில் மின் கட்டணத்தைக் கூட்டவோ, குறைக்கவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை.

அதற்கான தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினாலேயே மேற்கொள்ளப்படும்.

அதே ​நேரம் தற்போதுள்ள நிலையில் மின்னுற்பத்திக்கான செலவை பிரதிபலிக்கும் வகையிலான மின்கட்டணமொன்றை நிர்ணயிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளமை உண்மை தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related posts

பலர் தலைமறைவு இவர்களை கண்டுபிடியுங்கள்

wpengine

அரச அதிகாரிகளுக்கு மீண்டும் வாகன உறுதிப்பத்திரம் (விடியோ)

wpengine

இன படுகொலையினை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஷிப்லி அழைப்பு

wpengine