பிரதான செய்திகள்

மின்னல் ஸ்ரீரங்கா ஏற்படுத்திய வாகன விபத்து! சேனாரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா ஏற்படுத்திய வாகன விபத்து சம்பந்தமான உரிய விசாரணைகளை நடத்தாமை சம்பந்தமாக பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்படலாம் என பொலிஸ் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து சேனாரத்னவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி அவரை ஓய்வுபெறவுள்ளதால், மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவது தாமதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டால், ஓய்வூதியம் உட்பட சிறப்புரிமைகள் கிடைக்காது போகும் என்ற காரணத்தினால், மேலதிக விசாரணைகள் தாமதிக்கப்பட்டு வருவதாக பேசப்படுகிறது.

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் கடந்த 2011ஆம்ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி நடந்ததுடன் விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார்.

ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய புஷ்பகுமார என்ற பொலிஸ் சார்ஜன்டே இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தை உயிரிழந்த சார்ஜன்டே ஓட்டியதாக பொலிஸார் அப்போது கூறியிருந்தனர்.சார்ஜன்ட்டின் தவறால் விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

விபத்தில் ஸ்ரீ ரங்காவுக்கு உடலில் ஒரு கீறல் கூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் பதவி வகிப்பதற்கு கல்வித்தகமை எதற்கு

wpengine

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளதுடன்

wpengine

ஏறாவூர் YSSC,மருதமுனை ஒலிம்பிக் மோதும் அரை இறுதி ஆட்டம் இன்று

wpengine