பிரதான செய்திகள்

மின்னல் ரங்காவுடன் சேர்ந்து ”வளர்த்த கடா மார்பில் மீண்டும் பாய்கின்றது.

சக்தி டீவியின் மின்னல் தயாரிப்பாளர் ஸ்ரீரங்கா கடந்த வருடம் ஜூலை மாதம் ஐந்தாம் திகதி நடாத்திய நிகழ்ச்சியின் போது கெமரா ஆன் இல் இருந்ததால் அவருடைய திருகு தாளங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.

அரசியல் நிகழ்ச்சியொன்றை இவர் எவ்வாறு தனக்கு ஏற்றவாறு சொல்லிக்கொடுத்து செய்கின்றார் என்பது அப்பட்டமாக வெளிவந்தது. அன்றைய நிகழ்ச்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர் சக்திவேலுக்கு கூத்தாடி ரங்கா இப்படிச் சொல்லுங்கள் அப்படிச் சொல்லுங்கள் என்று மிகவும் தெளிவாக கற்றுக் கொடுக்கின்றார்.

அதே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்னல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹுனைஸ் பாரூக், மஸ்தான் ஆகியோருக்கு, ஸ்ரீரங்கா எனும் ஊடகக் கோமாளி ரிஷாட்டைப்பற்றி இப்படிக் கேட்பேன், அப்படிக்கேட்பேன் என்று கூறியே அந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளமை வெட்ட வெளிச்சமாக உள்ளது.

ரிஷாட்டுக்கு பரம எதிரியான ஹுனைஸ்ஸை அழைத்து அவர் கேள்வி கேட்கும் விதமும் அவரிடமிருந்து பதிலெடுக்கும் விதமும் ரிஷாட்டை பழிவாங்கும் நோக்கத்தைக் கொண்டதென எல்லாரும் நம்புகின்றனர்.

”வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல“ முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தில் காலையில் பைல் தூக்கி மாலையில் மாலுக்கடையில் மீன் வியாபாரம் செய்த ஹுனைஸ் பாரூக்கை அரசியலுக்கு ரிஷாட் கொண்டுவந்ததன் பிரதிபலன் இப்போது எல்லோருக்கும் புரிந்துவிட்டது.

ரங்காவைப் பொருத்த வரையில் கடந்த காலங்களில் ஹரீஸையும் மயோனையும் மோதவிட்டார். பின்னர் ஆஸாத் சாலியையும் ஹக்கீமையும் மோதவிட்டார். அத்துடன் அவர் ரிஷாட்டுக்குச் செய்த அநியாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவர் முஸ்லிம் சமூகத்தின் ஒரு விரோதி. யஹூதி.

Related posts

சாதனை படைத்த இறக்காமம் மதீனா வித்தியாலய மாணவர்கள், வழிகாட்டிய சம்மாந்துறை ஆசிரியர்.

wpengine

டிக்-டாக் தடை! இந்தியா ஊழியர்கள் பணி நீக்கம்

wpengine

பிரித்தானியாவுக்கு விளையாட சென்ற இலங்கை வீரர்கள் ஒட்டம்

wpengine