உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மின்னஞ்சல் விவகாரம்! புலனாய்வுத் துறை பணிப்பாளர் டொனால்ட் ட்ரம்சினால் பணிநீக்கம்

அமெரிக்காவின் புலனாய்வுத் துறை பணிப்பாளர் அந்நாட்டு ஜனாதிபதியால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹிலாரி கிளிண்டன் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பான விசாரணையை கையாண்ட விதம் தொடர்பாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை பணிப்பாளர் ஜேம்ஸ் கோமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில் அவரை பணிநீக்கம் செய்வதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமையவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி,ஜேம்ஸ் கோமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, ரஷ்யாவின் தலையீடு குறித்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஜேம்ஸ் கோமி விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்ததாக ஜனநாயக கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

குருணாகல் மாவட்ட சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் அ.இ.ம.கா உடன் இணைவு…

wpengine

அனந்தி சசிதரனுக்கு ஆங்கில மொழி தெரியுமா?

wpengine

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கு அழைப்பு விடுத்த கட்சி

wpengine