பிரதான செய்திகள்

மின்சாரம் தாக்கி இருவர் பலி; மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் வீடு ஒன்றின் மேல்மாடி கூரையை திருத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தச்சு தொழிலாளர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை (14) பகல் 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருதயபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ரொக்கி சைய்டே மற்றும் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 25 வயதுடைய ஞானபிரகாசம் கோடிசன் ஆகியேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் .

 
அமிர்தகழி பாடசாலை வீதியிலுள்ள மேல்மாடி வீட்டின் ஒருபகுதில் இன்று காலையில் 3 தச்சு தொழிலாளர்கள் கூரையில் திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 
இதன் போது பகல் 11 மணியளவில் கூரையின் இருந்த தகரம் கழன்று வீதியில் இருந்து வீட்டிற்கு வரும் மின்சார வயரினை வெட்டியதையடுத்து தொழிலாளர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து 1919 அவசர அம்புயூலன்ஸ் சேவைக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் சென்று பரிசோதித்தில் இருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து காயமடைந்த 25 வயதுடைய இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

 
இதேவேளை உயிரிழந்த இருவரையும் வீட்டின் உரிமையாளர் முச்சக்கரவண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

30 மேற்பட்ட இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் டிலாந்த விதானகே

wpengine

வவுனியா மாவட்ட அரசியவாதிகளே! அப்பாவி தொழிலாளிகளின் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

wpengine

பல்கலைக்கழக மாணவர்களுக்கான வட்டியில்லாத கடன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Editor