பிரதான செய்திகள்

மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும்

மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் வர்த்தக மற்றும் சமுர்த்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கட்சித் தலைவர்கள் முன்மொழிந்தனர். அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவாக ஏற்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts

பெருமானாரின் முன்மாதிரிகளில் சோதனைகளை எதிர்கொள்வோம்..!

wpengine

மன்னார் சவுத்பாறை சேர்ந்த வறிய குடும்பத்திற்கு பா.டெனிஸ்வரன் உதவி

wpengine

முசலி பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான கருத்தரங்கு

wpengine