செய்திகள்பிரதான செய்திகள்

மின்கல பாவனையாளர்கள் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து இணைப்புகளை துண்டிக்கும்படி கோரிக்கை .

கூரை சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09.02.2025) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது.

கொழும்பு பிரதான அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சர்
இந்த நிலையில் இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் மின்சாரம் வழமைக்கு கொண்டுவரப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் மின்சாரம் சீராகும் வரை பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை (NWRDB) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கூரை சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் இன்று (9.02.2025) மாலை 4 மணி வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

கருணா மற்றும் பிள்ளையான் பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பில் எந்தவித தகவலையும் வழங்கவில்லை.

Maash

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் பாரபட்சம்

wpengine

மன்னார் நகர சபையின் புதிய அலுவலக மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

wpengine