Breaking
Sun. Nov 24th, 2024

மினுவாங்கொடை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்ட தினத்தன்று இரவு இரண்டரை மணித்தியாலம் பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித்தலைவர் மதுமாதவ அரவிந்த அந்த பிரதேசத்தில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறையின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது கையடக்க தொலைபேசி அறிக்கை பகுப்பாய்வு மற்றும் அந்த பகுதியில் இருந்து பெறப்பட்ட சீ.சீ.டி.வி காணொளி காட்சிகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி இரவு ஏற்பட்ட அமைதியின்மையுடன் மினுவாங்கொடை நகர் மற்றும் அதனை அண்மித்துள்ள 61 வர்த்தக நிலையங்கள், 12 வீடுகள் மற்றும் பள்ளிவாசல் என்பனவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தி சேதம் ஏற்படுத்தப்பட்டன.

சம்பவம் இடம்பெற்ற போது, மதுமாதவ அரவிந்த, மினுவாங்கொடை நகரில் நடந்து சென்றதை குறித்த வழியாக பயணித்த ஒருவர் கையடக்க தொலைபேசியூடாக ஒளிப்பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தார்.

இது தொடர்பில் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித்தலைவர் மதுமாதவ அரவிந்த, தான் திவுலப்பிட்டி பகுதிக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட வாகன நெரிசல் குறித்து அறிந்து கொள்வதற்காக வாகனத்தை விட்டு இறங்கி நடந்து சென்றதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவருக்கு மதுமாதவ அரவிந்த தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *