அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

“மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள்” மாவை மகனிடம் விசாரணை. !

மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) வீட்டில் யாழ். கே.கே. எஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

ந்த பதாகையை காட்சிப்படுத்தியது யார், மற்றும் அதன் பின்னணி என்ன என்பவை தொடர்பில் மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அவரது மகன் கலையமுதன் சேனாதிராஜா தெரிவித்துள்ளதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசடிச் சந்தியிலும் ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது மற்றும் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது. இரண்டையும் நானே எமது ஆதரவாளர்கள் ஊடாக அப்புறப்படுத்தினேன் என கலையமுதன் சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

குறித்த பதாகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (Ilankai tamil arasu kachchi), சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

மேலும், காட்சிப்படுத்தப்பட்ட அந்த பதாகையில் மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

சாய்ந்தமருது வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி அரசியல் ஆதாயங்களுக்காக தடுக்கப்பட்டுள்ளது ஏன்?

wpengine

மன்னார் ,தாழ்வுபாட்டு கிராமத்தில் கைக்குண்டு மீட்பு

wpengine

தாஜுடினைப் போன்று எனது மகனுக்கும் நடந்து இருக்கும் -மேவின் சில்வா

wpengine