Breaking
Mon. Nov 25th, 2024
ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்ட மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் முச­லிப்­ பி­ர­தே­சத்தில் சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு தனது அறிக்­கையை எதிர்­வரும் 21 ஆம் திகதி சமர்ப்­பிக்க வேண்­டி­யுள்­ள நிலையில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து போதுமான தகவல்கள் தமக்கு இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என அக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தோற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மறிச்சுக்கட்டி பறிபோகும் நிலை தோன்றியுள்ளதாகவும் அரசியல் தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவேதான் முஸ்லிம் சமூக அமைப்­புகள், அர­சியல் குழுக்கள், சமூக ஆர்­வ­லர்கள் முசலி பிர­தேச காணிகள் தொடர்பில் தேவை­யான ஆவ­ணங்கள், தக­வல்கள், ஆதா­ரங்கள் மற்றும் மீள் குடி­யேற்றம் தொடர்­பான விப­ரங்­களை அக் குழுவுக்கு உடன் சமர்ப்பிக்க வேண்டியது அனைவரதும் கடப்பாடாகும்.
மாவில்லு பேணற்­காடு வர்த்தமானி அறிவித்தல் மூலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டதையடுத்து அப் பகுதி மக்கள் சுமார் 45 நாட்களாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து இந்த விடயத்துக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அதன் பயனாக ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. குறித்த குழு எதிர்வரும் 21 ஆம் திகதி தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
எனினும் இவ்வறிக்கையில் உள்ளடக்குவதற்கு போதுமான தக­வல்கள் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து அக் குழு­வுக்கு கிடைக்­கப்­பெ­றா­மையால் முழு­மை­யான அறிக்­கையைச் சமர்ப்­பிப்­பதில் சிக்­கல்கள் உரு­வா­கி­யுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.
குறிப்­பாக  அப்­பி­ர­தே­சத்தில் மீள் குடி­யேற்­றத்­திற்­காக வர­வுள்ள குடும்­பங்­களின் எண்­ணிக்கை, அக்­ குடும்­பங்­க­ளுக்குத் தேவை­யான காணிகள், காணிகள் எத்­தனை ஏக்கர் தேவைப்­ப­டு­கின்­றன, எந்த இடத்தில் காணிகள் வழங்­கப்­பட வேண்டும் எனும் விப­ரங்கள் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட குழு­வுக்கு வழங்­கப்­ப­ட­ வேண்டும். அத்­தோடு மீள்­கு­டி­யேறும் மக்­களின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, வாழ்­வா­தாரம் என்­ப­வற்­றுக்­காகத் தேவைப்­படும் வயல் நிலங்கள், விவ­சாய நிலங்கள் என்­ப­னவும் குழு­வுக்கு  சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. மேலும் மக்கள் வாழ்ந்த பழைய கிரா­மங்கள் எங்­கி­ருக்­கின்­றன, அந்தக் கிரா­மங்­களின் எல்லை, அங்­கி­ருந்த பாட­சா­லைகள், பள்­ளி­வா­சல்கள் போன்­ற­வற்றின் விப­ரங்­களும் அக் குழுவுக்கு தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவேதான் இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக செயற்பட்டு குறித்த குழுவை அணுகி தம்மிடமுள்ள விபரங்களை சமர்ப்பிப்பதே சிறந்ததாகும். எனினும் எஞ்சியிருப்பது மிகவும் குறுகிய காலப் பகுதி என்பதால் குறித்த குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதியை நீடிக்கக் கோரவும் முடியும்.  இது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.
வில்பத்துடன் தொடர்புடைய விவகாரங்களில் அரசியல் தரப்புகள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதை விடுத்து இது விடயத்தில் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே நமது பூர்வீக நிலங்களைப் பாதுகாக்க முடியுமாகவிருக்கும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *