பிரதான செய்திகள்

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் சட்டத்தரணி எம்.எம். ஜவாட் (நளீமி) தலைமையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள முன்னணி தமிழ் மொழி மூல பாடசாலையான ஸாஹிராக் கல்லூரி, கல்வியில் மாத்திரமல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் அதிகளவு முக்கியத்துவம் வழங்குகின்றது. அதற்கமைய மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நீண்ட இடைவேளைக்கு பின்னர் கல்லூரியின் புதிய அதிபர் எம்.எம். ஜவார் அவர்களின் வழிகாட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தரம் 6-9 மற்றும் தரம் 10-13 என இரண்டு பிரிவுகளாக மேற்படி தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தரம் 6-9 பிரிவில் 80 மாணவ வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன் அதில் 40 மாணவர்களும், தரம் 10-13 பிரிவில் 100 மாணவ வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன் அதில் 80 மாணவர்களும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Related posts

தலைமன்னார் வீதியில் உயிரிழந்த 5ஆம் ஆண்டு மாணவி பாத்திமா றிஸ்னா

wpengine

மசூதியில் தாக்குதல் நடத்தியவருக்கு 21 ஆண்டு சிறை

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்களை சுற்றிவளைத்த நல்லாட்சியின் பிக்குகள்

wpengine