Breaking
Sun. Nov 24th, 2024
மாவனல்லை ஸாஹிரா 2007 சா/த மற்றும் 2010 உ/த மாணவர்களின் (பிரிவு 77) ஏற்பாட்டில் மாணவ மாணவியரின் ஒன்று கூடல் மிகவும் கோலாகலமாகவும் சிறப்பாகவும் கடந்த 10/03 /2019 (ஞாயிறு) நடை பெற்றது. இந்த நிகழ்வின் போது பிரிவு 77 மாணவர்களும் அவர்கள் சார்ந்தோரும் வரவழைக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் கௌரவிக்கப்பட்டனர்.

பிரிவு 77இன் அனைத்து மாணவ, மாணவியர்கள் மற்றும் பிரிவு 77இன் காலப்பகுதி அதிபர்கள், பிரதி அதிபர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், பிரிவு 77இன் தம்பதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் போன்ற அனைத்து தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.

சுமார் 300கும் மேற்பட்ட பிரிவு 77ன் உறுப்பினர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வந்து சிறப்பித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் இந்த நிகழ்வை கொண்டாடினர். கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் இந்த நிகழ்வானது மாவனல்லை சாஹிராவின் ஆரம்ப பிரிவு கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

துபாயில் வசிக்கும் ஷம்ரான் மற்றும் பாஹிக் தலைமையில் ஒருங்கமைக்கப்பட்ட இந்த விழாவுக்காக பிரிவின் நிர்வாகம் சிறந்த முறையில் தங்களின் முதல் தர பங்களிப்பை முழு மனதுடன் வழங்கி இந்த விழாவை சிறப்பித்தனர். பிரிவின் முக்கிய உறுப்பினர்களான ரிஸ்வான், ஹஸீப், முனாசிர், ரிம்சி, மபாஸ், ரஷாட் மரிக்கார், ஹிலால், ஷப்ரான், சாதிர், இஜாஸ், ஷஹீம், சாகிர், இஸ்ஸத், பயாஸ், ரியாஸ், சமீர், அதீக், இர்பான், அஸ்மத், அஸ்ரி, ரிஷாட், ரிஹான்டீன், அன்பஸ், மேலும் பலர் தங்களது பங்களிப்பை மனப்பூர்வமாக வழங்கி விழாவை மேலும் சிறப்பித்தனர்.

விழாவில் பிரிவு 77 இன் தலைவர் ரிஸ்வான் ரஸ்ஸாக் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த ஒன்று கூடலானது தனது நீண்ட கால குறிக்கோளாக இருந்ததாகவும், பழைய மாணவர்களை அவர்களின் திறன்விருத்தி, பரஸ்பர நன்மை மற்றும் ஒத்துழைப்பினூடாக ஒன்றிணைந்து இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி பாடசாலையின் நீண்ட காலக்குறிக்கோள்களை அடைவதற்கான ஒரு பலம் வாய்ந்த சக்தியாகத் தொழிற்படுவதாகும் எனக் குறிப்பிட்டார்.

பெண்கள் பிரிவின் சார்பாக செயற்பட்ட திருமதி. ஜானி கூறுகையில் எமது 77ஆம் பிரிவினூடாக பாடசாலை மாணவியர்களின் கல்வி, இணைப்பாடவிதான செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும், எதிர்கால சந்ததியினரின் கல்வி தரத்தை உயர்த்த பிரிவு 77 இன் சார்பாக தகுந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பெண்கள் பிரிவில் விழாவின் ஏற்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலைமை தாங்கிய திருமதி. ஹமீஹா பிர்சான் அவர்கள் கூறுகையில், எதிர் வரும் காலங்களில் இதை விட சிறப்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது மட்டுமல்லாமல், பாடசாலை சார்ந்த சமூக பணிகளில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் இந்த நிகழ்வை நடத்த உதவிய அணைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

இந்த ஒன்று கூடலை தொடர்ந்து பாடசாலையின் நான்கு இல்லங்களுக்கு இடையிலான புட்ஸால் உதைபந்தாட்ட போட்டி நடை பெற்றது, இதில் அல் அஸ்ஹர், அல் சாஹிரா, கோடோவா, நிசாமியா இல்லங்களை சேர்ந்த பிரிவு 77 இன் அனைவரும் பங்கு பற்றினர். இதில் அல் அஸ்ஹர் இல்லம் சிறந்த முறையில் விளையாடி இந்த தொடரை கைப்பற்றி கொண்டனர். அதேவேளை சளைக்காமல் போராடிய அல் சாஹிரா இல்லம் இரண்டாம் இடத்தையும் கோடோவா இல்லம் மூன்றாம் இடத்தையும், நிசாமியா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

மாவனல்லை சாஹிராவின் பலம் வாய்ந்த பிரிவுகளில் ஒன்றாக பிரிவு 77 இனரை குறிப்பிடலாம். அந்த வகையில் இலங்கை மற்றும் இலங்கைக்கு வெளியில் இருந்து இயங்கிவரும் இந்த பிரிவானது பல துறைகளில் பல்வேறு ஆளுமை மிக்க நபர்களை தம்வசம் கொண்டுள்ளது. மருத்துவ, விஞ்ஞான, சட்ட, கணக்கியல், பொறியியல், வணிகத்துறை, கல்வித்துறை போன்ற அனைத்து துறைகளிலும் தனக்கே உரிய பாணியில் கால் பதித்துள்ளது. இந்த பிரிவை ஸாஹிராவின் பழைய மாணவர் அமைப்பின் ஒரு முக்கிய தூண் என்றால் அது மிகையாகாது.

இந்த பழைய மாணவர் பிரிவு 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், சுமார் 250 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுடன் இயங்கி வருகின்றது. இந்த பிரிவு ஸாஹிராவின் பழைய மாணவர் பிரிவுகள் மத்தியில் முன்மாதிரி பிரிவாக செயற்படுவதோடு, இந்த ஒன்று கூடலின் பின் தங்களை மீண்டும் நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. எதிர் வரும் திட்டங்களின் மூலம் மேலும் புதிய திசையில் தமது சக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பிரிவு 77இன் குடும்பத்தை சிறந்த பாதையில் நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மாவனல்லை வரலாற்றில் தலைசிறந்த ஆளுமைகளை உருவாக்கிய சுமார் 3500 மாணவர்களைக்கொண்ட மாவனல்லை சாஹிரா கல்லூரி, சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள தமிழ், ஆங்கில மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் தர வரிசையில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. மாவனல்லை சாஹிராவின் செல்வாக்கு மிக்க இந்த பிரிவானது எதிர்வரும் சாஹிராவின் நூற்றாண்டு விழாவில் தமது பிரிவினூடாக பாடசாலைக்கு எவ்வாறான விதங்களில் தமது பங்களிப்பை வழங்கலாம் என்று இந்த விழாவில் கலந்தாய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 
பிரிவு 77 ஐ சார்ந்தவர்கள் இவ்வாறானதொரு நிகழ்வினை ஏற்பாடு செய்தமை இதுவே பாடசாலை வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு கல்லூரியின் வரலாற்றில் முக்கிய மைற்கல் என்றால் மிகையாகாது. நிகழ்வில் கலந்து சிறப்பித்த 77ம் பிரிவின் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் 77ம் பிரிவின் நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டது!
ஷம்ரான் நவாஸ் (துபாய்)
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *