பிரதான செய்திகள்

மாவட்ட ரீதியாக உடல்களை அடக்கம் செய்ய இடங்களை தெரிவு செய்யுங்கள்


கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்குரிய காணிகளை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான இடங்கள் குறித்து விரைவாக அறிவிக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய, பொருத்தமான காணியை தெரிவு செய்யுமாறே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சடலங்களை அடக்கம் செய்வதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள மற்றுமொரு இடம் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள இடம் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளோரை அடக்கம் செய்வதற்குரிய இடமா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு – ஓட்டமாவடி, சூடுபத்தினசேனையில் இதுவரையில் 30 இற்கும் மேற்பட்டோரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்ட மக்கள்

wpengine

சஜித், ஆசாத் கூட்டணி! தேசிய பட்டியல் வழங்குவதாக உறுதி

wpengine

டிசம்பர் 07ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் கோத்தாபாய போட்டி

wpengine