Breaking
Fri. Nov 22nd, 2024

அப்பாவி மக்கள் மத்தியில் இனவாத்தை விதைக்கும் வகையில் மாவட்டஅபிவிருத்தி கூட்டங்களில் கருதஹதுரைப்பதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக வவுனியா நகர சபை உறுப்பினரகளான அப்துல் பாரி மற்றும் முஹம்மத் லரீப் ஆகீயோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


வவுனியா மாவட்டத்தின் ஒருங்கினைப்புக் குழுவின் கூட்டம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனீபாவின் நெறிப்படுத்தலில் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடை பெற்றுள்ளது.

இதன் போது ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தர்மபால செனவிரத்ன என்பவரினால் அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்தானது வவுனியா மாவட்டத்தில் வாழும் சகல சமூகங்களுக்குள்ளும் பிளவையும்,இனவாத சிந்தனைகளையும் துபமிடும் வகையில் அமைந்திருந்தானதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும்,இதற்கு எதிராக நகர சபையின் அமர்வின் போது கண்டனத் தீர்மானமொன்றினை கொண்டுவரவுள்ளதாகவம் தெரிவித்துள்ளனர்.

கடந்த யுத்த காலத்திலும் சரி இதற்கு பிற்பாடான காலங்களிலும் சரி இங்கு வாழும் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் மிகவும் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவராக கடந்த அரசாங்க காலத்தில் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மிகவும் நேர்மையாகவும்,சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தமது பணிகளை செய்துள்ளார்.

இதற்கு இந்த மாவட்டத்தை சேர்ந்த அனைத்து இன மக்களும் நன்றி கூறுகின்றனர்.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் உள்ள சிங்கள கிராமங்களின் அபிவிருத்தி,தொழில் வாய்ப்பு,மத தளங்களின் அபிவிருத்தி என்பனவற்றிற்கு முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பங்களிப்பு தொடர்பில் தர்மபால அவர்கள் அறிந்திருந்தும்,தற்போதைய அவரது கொள்கையான இன ரீதியான செயற்பாட்டின் வெளிப்பாடாக மாவட்ட குழு கூட்டத்தில் தெரிவித்திருக்கின்ற கருத்தை காணமுடிகின்றது.

முன்னாள் அமைச்சர் றிசாத் பதீயுதீன் அவர்கள் தமிழ்,முஸ்லிம்,சிங்களம் என்ற பாகுபாடுகள் இன்றி தேவையுள்ளவர்களுக்க தேவையானதை பெற்றுக் கொடுத்துள்ளதுடன்,குறிப்பாக சிங்கள சமூகமும்,ஏனைய சமூகமும் ஏற்றுக்கொண்ட வடமாகாண சபையின் பிரதி நிதியாக வீ ஜயதிலக்கவை தெரிவு செய்தமையினையும் தர்மபால செனவிரத்னவுக்கு ஞாபகமூட்டவிரும்புகின்றேன்.

இதே போன்று இந்திய வீடமைப்பு திட்டம் வந்த போதும் பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.அப்போதைய இந்திய தாதுவர் அசோக் கே கான்தா வவுனியா வந்து யதார்த்தத்தை அறிந்து உண்மையினை வெளிப்படுத்தினார்.

வீடமைப்பு திட்டத்தில் எந்த வித ஒரு தலைப்பட்சமான செயற்பாடுகளையும் அப்போதைய அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்யவில்லை என்று,வெறுமனே இனவாதத்தின்மூலம் தமது அரசியல் செய்யும் தற்போதைய வ்வனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தர்மபால என்பவர் இந்த பதவிக்கு பொறுத்தம்ற்றவர் என்பவர் என்பதினாலும்,இவர் போன்றவர்கள் இந்த பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்பதினால் எமது கண்டனத்தை தெரிவிப்பதுடன்,வவுனியா அரைசாங்க அதிபர் இது தொடர்பில் உரிய தலைமைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மாவட்டஅபிவிருத்தி குழு என்பது தனிப்ட்ட எவரது சொத்தல்ல,இது மாவட்ட மக்களின் நலன் குறித்தும்,தேவை குறித்தும் தீர்மானம் எடுக்கும் ஒரு சபை என்பதை இதனது தலைமைகள் புரிந்து கொண்டு பணியாற்ற வேணடும் என்றும் மேலும் இந்த ஊடக அறிக்கையில் நகர சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *