செய்திகள்பிரதான செய்திகள்

மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்துச் சம்பவம் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீயை கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் மட்டக்களப்பு தீ அணைக்கும் படை, பிரதேச சமூக மட்ட அமைப்பினர், பிரதேச இளைஞர்கள் என பலரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையிலும், குறித்த தீ விபத்தில் வர்த்தக நிலையத்திலிருந்த பல இலட்சம் பெறுமதியான அனைத்துப் பொருட்களும் தீயில் கருகியுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பு நகரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழு முன் கோத்தபாய இன்றும் ஆஜரானார்

wpengine

வவுனியாவில் இரு மாணவர்கள் முதலாமிடம்

wpengine