பிரதான செய்திகள்

மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு மன்னாரில்

ஈழப்போரின் போது வீர மரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் மன்னார் ஆண்டாங்குளத்தில் நேற்றைய தினம் நினைவு கூறப்பட்டது.

ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி அலுவலகத்தில், ஜனநாயக போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணி தலைவர் சி.வேந்தன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுடர் ஏற்றப்பட்டு முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தப்பிரதேசத்தில் உள்ள போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனநாயக போராளிகள் கட்சியினரினால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீரில் மூழ்கிய வவுனியா மாவட்ட செயலகம்

wpengine

778 வர்த்தகர்களுக்கு எதிராக வன்னியில் வழக்குத் தாக்கல்

wpengine

பிரதமர் வேட்பாளராக ரணில்

wpengine