பிரதான செய்திகள்

மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு போட்டி மன்னாரில்

தேசிய ரீதியாக வருடாந்தம் இடம்பெறும் தேசிய மட்ட மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழாவிற்காக பங்கு பெறுநர்களை, முதற்கட்டமாக மாவட்ட ரீதியில் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் விளையாட்டு நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

சமூக சேவை திணைக்களமும் சமூக நலன் பிரிவு கைத்தொழில் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களிலும் உள்ள மாற்றாற்றல் உள்ளவர்களை ஒருங்கிணைத்து விளையாட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலகங்களையும் சேர்ந்த 150ற்கும் மேற்பட்ட மாற்றாற்றல் உடைய ஆண், பெண் இரு பாலாரும் போட்டியாளர்களாக இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், மாவட்ட விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற அனைத்து வீர வீராங்கனைகளும் வருகின்ற மாதங்களில் நடைபெற இருக்கின்ற தேசிய மட்ட விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

ஏறாவூரில் இரட்டை கொலை! நால்வர் கைது பதற்ற நிலை

wpengine

றிஷாட் காட்டை அழித்து வீடுகளை கட்டினார்! 29ஆம் நீதி மன்ற அழைப்பாணை

wpengine

ஹூஜி தலைவரின் கருணை மனுவை நிராகரித்த வங்காளதேச ஜனாதிபதி: விரைவில் மரண தண்டனை

wpengine