மார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்த பெண், தேவாலயத்தில் வைத்து தனது மேற்சட்டையைக் கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மெரியானா மில்வார்ட் (33) என்ற பெண் ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்தவர். பிரேசில் இராணுவத்தில் தாதியாகப் பணியாற்றிய இவர் தனது 24 வயதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
நோய் தீவிரமாக இருந்த நிலையிலேயே அது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரது இரண்டு மார்பகங்களுமே அகற்றப்பட்டன.
இதையடுத்து, பொது இடங்களுக்கு வருகை தர வேண்டாம் என்றும் அதனால் அவர் மனம் பாதிக்கப்படும் என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது.
இந்தக் கருத்தை மாற்ற நினைத்த அவர், அண்மையில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அதன்போது, அங்கிருந்த தேவாலயத்துக்குச் சென்ற அவர், திடீரென்று அவரது மேலாடையைக் கழற்றி தனது தழும்புகளை அங்கு கூடியிருந்தவர்களுக்குக் காட்டினார்.
“நான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவள். இதை நான் மறைக்க விரும்பவில்லை. சொல்லப்போனால், முன்னரைவிட இப்போது நான் மிகத் துணிச்சலானவளாக மாறிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.