பிரதான செய்திகள்

மார்ச்சியில் மாகாண சபை தேர்தல்

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்து வருடம் நடத்த உள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்த வருடம் ஜனவரியிலும், மாகாண சபைத் தேர்தலை மார்ச்சிலும் நடத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சாதாரணமாக உறுப்பினர் ஒருவரின் மனைவி அல்லது பிள்ளைகள் ஆகியோருக்கு வாய்ப்பளிப்பதைத் தவிர்த்து, ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குடும்பத்துக்கு ஒருவர் என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகளிடம் அமைச்சர் பைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

முஸ்லிம் செயலாளரை நீக்கிவிட்டு அகில விராஜ் நியமனம்

wpengine

வௌ்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine

அரச சேவையில் 7,456 பேர் இணைத்துக் கொள்ள அனுமதி .

Maash