பிரதான செய்திகள்

மாம்புரி கடற்கரை பகுதியில் கை , கால் இல்லாத நிலையில் சடலம்

கல்பிட்டிய, மாம்புரிய பிரதேச கடற்பகுதியில் கை மற்றும் கால்கள் இல்லாத நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீனவர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டபிடிக்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம்  பிரேத பரிசோதனைகளுக்காக  புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கு .

wpengine

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு அமைச்சர் றிசாத் விஜயம் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

wpengine

மன்னார்,மடுவில் கடும் மழை! பலர் அவதி

wpengine