பிரதான செய்திகள்

மான்,மரை,காட்டு பன்றிகளை மஹிந்த சாப்பிட முடியாது பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் தாம் உள்ளிட்டவர்கள் சட்டவிரோத இறைச்சியை சுவைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து அதியுச்ச தீர்மானங்களை எடுக்கும் நிறைவேற்று அதிகார உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் சட்டவிரோத இறைச்சி உண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தேசியப் பாதுகாப்புச் சபையின் கூட்டத்தின் பின்னர் வழங்கப்படும் போசன விருந்துபசாரத்தில் சட்ட விரோத இறைச்சி வகைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

மான், மரை, காட்டுப் பன்றி போன்ற பல்வேறு இறைச்சி வகைகள் சாப்பாட்டு மேசையில் காணப்படும்.எனக்கு வனவிலங்கு அமைச்சு கொடுக்கப்பட்டமை குறித்து மஹிந்த ராஜபக்ச கவலைப்படுவதில் பயனில்லை.

இதுவரையில் சாப்பிட்ட மான், மரை இறைச்சி வகைகளை இனி சாப்பிட முடியாது என்ற பீதியினால் என் மீது குற்றம் சுமத்துகின்றார்கள் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான உத்தரவு

wpengine

வடமாகாண வர்த்தக வாணிப அதிகார சபை உருவாக்கல்! அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில்.

wpengine

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மன அழுத்தத்தில் இருக்கிறார்.

wpengine