அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மாந்தை மேற்கு பிரதேச பிரிவில் மூன்று கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தெரிவு.

மாந்தை மேற்கு – ஈச்சிலவக்கை கிராம உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம், அடம்பன், ஈச்சிலவக்கை ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து நேற்று(06.02.2025) கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள ஈச்சலவக்கை கிராமம் மிகுந்த பின் தங்கிய கிராமமாக உள்ளது. அந்தக் கிராமத்தில் பல உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அதனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் மூன்று கிராமங்களை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தெரிவு செய்துள்ளோம். அதில் ஈச்சிலவக்கை கிராமமும் தெரிவு செய்யப்பட்டுளளது.

இதன்போது குடிநீர், பாதைகள், பாடசாலை, முன்பள்ளி, ஆலயங்கள் போன்ற அனைத்து இடங்களையும் அபிவிருத்தி செய்வதற்குரிய செயற்திட்ட முன்மொழிவுகளை சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வழங்கியுள்ளோம்.

அதற்கான நிதியை விடுவித்து இந்த வருடத்திற்குள்ளேயே இந்த கிராமத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு முடிக்கவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

பஷிலின் மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைப்பு

wpengine

மன்னார் மக்களை ஏமாற்றும் நகை கடை உரிமையாளர்கள்

wpengine

இழப்புகளை படிப்பினையாக கொண்டு தமிழ்,முஸ்லிம் இணைந்து செயற்பட வேண்டும் றிஷாட்

wpengine