Breaking
Sun. Nov 24th, 2024

“நாங்கள் எல்லாவற்றையும் இழந்தோம்.ஆனால் எங்களுடைய கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை ஒரு போதும் இழந்து விடக்கூடாது” என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

 

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு பெருவிழா இன்று காலை 7 மணியளவில் ஆண்டாங்குளம் ம.வி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இதன் போது விருந்தினராக கலந்து கொண்டு குறித்த நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே கேதீஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.

 

கேதீஸ்வரன் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“நான் இந்த மண்ணிற்கு உரியவன். சிறு வயதில் இருந்தே இப்படியான பல்வேறு நிகழ்வுகள் இங்கே நடப்பதை நான் அறிவேன். மிக்க மகிழ்ச்சியாக அன்றைய காலம் இருந்தது. மாதம் ஒரு முறை கலை நிகழ்வுகள் இடம் பெறுகின்றமை வழமை.

ஆனால் கொடுமையான அந்த 30 வருட போரின் பின்னர் அந்த சந்தர்ப்பங்கள் எல்லாம் கை விட்டு போயுள்ளது. மக்களின் வாழ்க்கையில்  கைவிடப்பட்ட ஒன்றாக கடந்த கால சம்பவங்கள் அமைந்துள்ளது.

ஆகவே நான் ஒரு பிரதேசச் செயலாளர் என்ற வகையில் மீண்டும் இந்த மாந்தை மேற்கு பிரதேசம் பழைய மகிழ்வுடன் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்ற அவா என்னிடம் உள்ளது.

பல்வேறு நபர்களின் உதவியுடன் இந்த சித்திரை புத்தாண்டு பெருவிழாவை நடாத்த ஏற்கனவே தீர்மானித்திருந்தோம். அந்த வகையில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது.

நான் இந்த மண்ணில் பிறந்தவன் என்ற அடிப்படையில் இந்த மண் கடந்த கால துயரச்சம்பவங்களில் இருந்து மீண்டு மகிழ்ச்சியுடன் புத்துயிர் பெற வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

நாங்கள் எல்லாவற்றையும் இழந்தோம்.ஆனால் எங்களுடைய கலை,கலாச்சார,பண்பாட்டு விழுமியங்களை ஒரு போதும் இழந்து விடக்கூடாது.

அந்த வகையிலே நாங்கள் இந்த பிரதேசத்தில் சித்திரை புத்தாண்டு விழாவை நடாத்த தீர்மானித்திருந்தோம்.அந்த வகையில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்” என  தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *