பிரதான செய்திகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட சமுர்த்தி பயனாளிகள்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 36 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

வாழ்வின் எழுச்சி திட்ட பயனாளிகள் பலரது சமுர்த்தி கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதோடு, குறித்த பயனாளிகளின் பெயர் விபரங்கள் நீக்கப்பட்டமையினை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1981 குடும்பங்கள் வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் ஊடாக சமுர்த்தியை பெற்றுக் கொண்ட நிலையில் அதில் தற்போது சுமார் 900 வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகளின் உதவித்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அவர்களின் பெயர் விபரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அவர்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையிலேயே பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகள் தம்மை பட்டியலில் இருந்து நீக்கியதை கண்டித்து போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்து சென்ற நாட்களை மீண்டும் கண் முன் கொண்டு வந்த அல் இல்மியா

wpengine

முஸ்லிம்களின் 45 சடலங்கள் இதுவரை அடக்கம்- சவேந்திர சில்வா

wpengine

வில்பத்து விவகாரம்: ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம் ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

wpengine