பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மாந்தை கிராம சேவையாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்!

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


இவர் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்பட்டுள்ளதோடு, அவர் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளமையும் தெரிய வருகின்றது.


தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எதிர்காலத்தில் மின்சாரக் கார்களை மாத்திரமே இறக்குமதி செய்ய தீர்மானம்!

Editor

முஸ்லிம்கள் கடந்த காலத்தில் உரிமைக்காக போராடி எதனையும் இழக்கவில்லை

wpengine

சீனாவில் தாயின் மாற்று கருப்பை மூலம் குழந்தை

wpengine