பிரதான செய்திகள்

மாநாயக்க தேரர்களின் ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தம்

நாட்டின் பௌத்த மாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் இடைநிறுத்தப்பட உள்ளது.

அரசாங்கத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கண்டி அஸ்கிரி, மல்வத்து, ரமன்ய மற்றும் அமரபுர பீடங்களின் மாநாயக்க தேரர்களைத் தவிர்ந்த ஏனைய பௌத்த மாநாயக்க தேரர்களின் வெளிநாட்டு ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட உள்ளது.

வெளிநாட்டு ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட உள்ள மாநாயக்க தேரர்கள் தொடர்பிலான பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

என்ன காரணத்திற்காக இவ்வாறு பௌத்த மாநாயக்க தேரர்களின் ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தப்படுகின்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Related posts

பரீட்சைப்பெறுபேறுகள் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பப்படுமா ? ஜனாதிபதி,பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்

wpengine

மக்களது பிரச்சினைகளை உண்மைகளை எழுதும் தமிழ் ,சிங்கள ஊடகவியலாளா்கள் கொலை;பிரதமர் ரணில்

wpengine

அரிசிக்கான சில்லறை விலை மாற்றம்! அமைச்சர் றிஷாட் உடனடி நடடிக்கை

wpengine