பிரதான செய்திகள்

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி -2016

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் 2016ஆம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

LICENTIATE COURSE IN ARABIC & ISLAMIC மற்றும் DIPLOMA IN ARABIC & ISLAMIC STUDIES ஆகிய பாடநெறிகளுக்கே புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

ஆறு வருடங்களைக் கொண்ட LICENTIATE COURSE IN ARABIC கற்கைநெறியில் அல்குர்ஆன், அல்ஹதீஸ், உயர்தர ஷரீஆ, உயர்தர அரபு மொழி, இஸ்லாமியக் கலைகள், ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம், தேர்வுப் பாடங்கள்ஆகியன கற்பிக்கப்படுகின்றன.

க.பொ.த (உ/த) பரீட்சை, அங்கீகரிக்கப்பட்டபல்கலைகழகம் ஒன்றில் கலைமாணி பட்டப் பரீட்சை (வெளிவாரி) என்பவற்றுக்கும் மாணவர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.இதற்கு மேலதிகமாக திறமையான மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில்கள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே திறமையானமாணவர்கள் பலர் எகிப்தின் அல் அஸ்ஹர், யெமனின் ஜாமிஅதுல் ஈமான் மற்றும் சவூதியில் உள்ள உம்முல் குரா, ஜாமியா இஸ்லாமியா ஆகிய பல்கலைக்கழகங்களில் உயர் கல்விக்கான புலமைப் பரிசில்களைப் பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.12920458_1558060211158286_5200870468112214412_n

அனுமதிக்கான தகமைகள் க.பொ.த (சா/த) பரீட்சையில் மூன்று பாடங்களில் (c)தரச் சித்தியுடன் தமிழ், கணிதம் உட்பட மொத்தம் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தலுடன் கணித பாடத்தில் சித்தியடையாவிடின் தமிழ் உட்பட ஐந்து பாடங்களில் c தர சித்தி பெற்றிருக்க வேண்டும்.

அவர் 1998.01.01ஆம் திகதிக்கு பின்னர் பிறந்திருத்தல் வேண்டும். இத்தகைமைகளை கொண்டவர்கள் மாத்திரமே இக்கற்கை நெறிக்கு இணைத்துக் கொள்ளப்படுவர்.

இந்த கற்கை நெறிக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் தமது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் LICENTIATE என டைப் செய்து 0777345367 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு 16.04.2016ம் திகதிக்கு முன்னர் SMS பண்ணவும்.அல்லது கல்லூரிக்கு நேரடியாக வருகை தந்தும் விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை கல்லூரியின் இன்னொரு பிரிவாக வர்த்தகத் துறைகாணப்படுகிறது இது மூன்று வருடங்களைக் கொண்டDIPLOMA IN ARABIC & ISLAMIC STUDIES கற்கை நெறி ஆகும் இதில் அல்குர்ஆன், அல்-ஹதீஸ், அரபு மொழி, இஸ்லாமியக் கலைகள், ஆங்கில மொழி, தகவல் தொழில் நுட்பம்,தலைமைதுவ கற்கை, போன்ற பாடங்களுடன் (க.பொ.த) உயர் தரப் பரீட்சைக்கான கணக்கீடு, வணிகக் கல்வி, பொருளியல் ஆகியபாடங்களும் கற்பிக்கப்படும்.

இதற்க்கான தகமைகள் க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம் அல்லது வர்த்தகம் உட்பட 5 பாடங்களில் (c)தரச்சித்தியுடன் உட்பட குறைந்தது 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தலுடன்1998.01.01ஆம் திகதிக்கு பின்னர் பிறந்திருத்தல் வேண்டும்.

மேற்கூறிய தகைமைகளை கொண்டவர்கள் மாத்திரமே இக்கற்கை நெறிக்கு இணைத்துக் கொள்ளப்படுவர்.

இந்த கற்கை நெறிக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் தமது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் DIPLOMA என டைப் செய்து 0777345367 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு 16.04.2016ம் திகதிக்கு முன்னர் SMS பண்ணவும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 0773171718, 0775052735, 0777345367ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ளமுடியும்.

புதிய மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம்திகதிகளில் மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

ஆழமான இஸ்லாமிய அறிவும் ஆன்மிகப் பண்புகளும் துறைசார்ந்த அறிவு, திறமைகளும்கொண்ட சிந்தனையாளர்கள், சமூகத் தலைவர்கள், திட்ட முகாமையாளர்கள், ஊர்மட்டத் தலைவர்கள், வழிகாட்டிகள், சமூக ஆய்வாளர்கள் போன்றோரை உருவாக்கும் பணியில் கடந்த இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லண்டனின் நகர மேயராக முதல் முஸ்லிம் ;பாகிஸ்தானின் பஸ் சாரதியின் மகன் தெரிவு!

wpengine

ஜனாதிபதியின் கரங்களை நாங்கள் பலப்படுத்த வேண்டும்- ஹிஸ்புல்லாஹ்

wpengine

சமஷ்டி தீர்மானம் சம்மந்தனிடம் கையளிக்கப்படும்

wpengine