Breaking
Mon. Nov 25th, 2024

மன்னார் மாவட்ட மடு கல்விவலயத்திற்குட்பட்ட கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 2016 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் அத்தோடு பாடசாலையின் புதிய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவமும் 16-03-2017 வியாழன் காலை 11:30 மணியளவில் பாடசாலை பிரதான ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் மேற்கொண்டவாறு தெரிவித்திருந்தார், அந்தவகையில் அவருடைய உரை தொடர்பான ஊடக அறிக்கையில் அவர் பின்வருமாறு தெரிவித்திருந்தார். ஒவ்வொரு மாணவர்களும் தங்களது பாடசாலை பருவத்தில் தாங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு வரவேண்டும் என்ற இலட்சியத்தை மனதில் ஆழமாக பதித்து கல்வியினைக்கற்கும்போதே எதிர்காலத்தில் தங்களது இலட்சியத்தை அடையமுடியும் என்று தெரிவித்ததோடு, மேலும் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று இல்லாது ஒவ்வொரு மாணவனும் சாதிக்கத்துடிக்கவேண்டும், இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களது கூற்றையும் அங்கு மாணவர்களுக்கு சுட்டிக்காட்டினார்.

அதாவது “பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்” ஆகவே மாணவர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றவேண்டுமெனில் ஒவ்வொரு மாணவர்களும் இலட்சியத்துடனும் அதனை அடைய வேண்டும் என்ற வெறியோடும் வாழவேண்டும் எனவும்,

அதுமட்டுமல்லாது நாம் வாழ்வில் எந்த உயர்ந்த நிலைக்கு சென்றாலும் தம்மை உருக்கி எம்மை உருவாக்கியவர்களான பெற்றோரையும் ஆசிரியர்களையும் எமது இறுதி மூச்சுள்ளவரை மதித்து நடக்கவேண்டும் என்றும் மாணவர்களை அன்பாகக் கேட்டுக்கொண்டதோடு தனது 2017 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து பாடசாலையின் பெளதீக வள அபிவிருத்திக்கு ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதுனாயிரம் ஒதுக்கித்தருவதாகவும், அதேவேளை கிராமத்தில் உள்ள தேவாலயத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் தருவதாகவும், புலமைப்பரிசிலில் சித்தியடைந்த 02 மாணவர்களுக்கும் துவிச்சக்கரவண்டி பரிசாக தருவதாகவும் தெரிவித்ததோடு இவ்வாறு தாம் இந்த இரண்டு மாணவர்களுக்கும் துவிச்சக்கரவண்டி வழங்குவதன் பிரதான நோக்கம் ஒன்று இவர்களை பாராட்டுவதும் அதனைவிட இந்த ஆண்டு புலமைப்பரிசில் எழுத்தவுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தவுமே என்றும் அந்தவகையில் இந்த வருடம் புலமைப்பரிசில் எழுதுகின்ற மாணவர்கள் அனைவரும் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தியடைந்தால் அனைவருக்கும் பரிசுகள் வழங்குவேன் என்றும் வாக்களித்தார்.

மேற்படி நிகழ்விற்கு மடு வலய கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.குரேதாஸ் அவர்களும், கட்டையடம்பன் பங்குத்தந்தை அவர்களும், ஏ.ரொஜன் தொழிலதிபர் முருங்கன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *