பிரதான செய்திகள்

மாணவர்களின் கல்விக்கு ஆப்பு வைக்கும் வவுனியா நகர சபை

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்தக்கூடாது என வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் அதிரடித் தீர்மானமொன்றினை எடுத்துள்ளார்.
வவுனியா, நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இத்தீர்மானத்தினை தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தனியார் வகுப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது, சுகாதார வசதிகள், காற்றோட்ட வசதிகள், நகரசபையில் பதிவு செய்தல், இரவு நேர வகுப்புகள் நடாத்துதல் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதன்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இறுதித் தீர்மானமாக ஞாயிற்றுக்கிழமைகளில் உயர்தர வகுப்புகள், சாதாரண தர வகுப்புகள், புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய வகுப்புகள் தவிர்ந்த அனைத்து வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் நகரசபையில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் மாலை 7.30 மணிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் எவ்வகையான வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காற்றோட்ட வசதிகள், மலசலகூடங்கள் உட்பட சுகாதார வசதிகள் போதுமான வகையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என இதன்போது தீர்மானிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து இந் நடைமுறை பின்பற்றப்படவேண்டும் என முடிவெடுக்கப்பட்டு நகரசபை தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் மக்களின் உரிமைககளையும் கௌரவத்தையும் பாதுகாகாக்க செயற்பட்டோம்.

wpengine

இஸ்லாம் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தருகின்றது – கெரி ஆனந்தசங்கரி

wpengine

ராஜபக்ஷவின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும்

wpengine