கொஹுவல பகுதியில், பாடசாலை மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது அருகில் இருந்த சிலர் கற்களால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பின்னர் நுகேகொடை – நாலந்தராம வீதியில் கொள்ளையிட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (16) குறித்த நபர், கொஹுவல பகுதியில் பாடசாலை மாணவனிடம் கூரிய ஆயுதத்தைக் காட்டி மிரட்டி, மாணவனின் பணப்பையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்ட நபர் மீது கற்களால் தாக்கியதாகவும், தாக்குதலுக்கு மத்தியில் அவர் தப்பி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் நுகேகொடை, நாலந்தராம வீதியில் உள்ள நடைபாதைக்கு அருகில் அந்த ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரின் தலையின் பின்புறம் மற்றும் காதைச் சுற்றி காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் குறித்து கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg