Breaking
Sun. Nov 24th, 2024

மாட்டிறைச்சி தின்று விட்டு நாங்கள் வந்தாலும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் சிவன் பிச்சை பாத்திரம் ஏந்தினார் என்றும்,

திருக்கேதீச்சரத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும் போது தவறு புரிந்தவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பேசியதை கண்டித்தும் இந்து ஆலய ஒன்றியம் கண்டனங்களை தெரிவித்தமை தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் துசியந்தன் நேற்று மாலை கடமை ஒன்றினை நிறைவேற்றிக் கொள்வதற்காக வந்தவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் வருகை தந்துள்ளார்.

இதன்போது அவர் துசியந்தன் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளதோடு, அச்சுறுத்தல் விடுத்ததாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலய வளைவினை விசமிகள் உடைத்ததன் எதிரொலியாக, வவுனியாவில் கண்டன அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் தலைமையில் நடைபெற்றதாகவும் இதில் கலந்துகொண்ட சிவசேனை அமைப்பின் தலைவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்ததாகவும் அறிய முடிகின்றது.

அதன் எதிரொலியாக வவுனியா மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களின் விஷேட நிகழ்வுகளில் அதிதிகளாக வேற்று மதத்தவர்களை அழைப்பதில்லை எனவும் இவ்வாறு ஏனைய மதங்களிலும் அழைக்கும் வழக்கம் இல்லை என்பதாலும் இவை இந்துக்களின் வைதீக, ஆகம நம்பிக்கைகளை சிதறடிப்பதால் வேற்று மதத்தவர்களுக்கு பதிலாக அவர்களின் கட்சியை சேர்ந்த இந்து பிரதிநிதி கலந்து கொள்ளலாம் எனவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

எனினும் அதனை மீறி குறித்த தவிசாளரின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்து ஆலயம் ஒன்றின் நிழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

இது தொடர்பில் இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் துசியந்தன் தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்து தனது முகநூலில் எழுதி வந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் துசியந்தன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக சைவ சமய உயர் பீடங்களிற்கும், இந்து சமய விவகார அமைச்சுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *