உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மாடுகளை வெட்ட தடை: மேகாலயா மாநிலத்தில் பா.ஜ.க.விலிருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தில் மேலும் ஒரு தலைவர் பா.ஜ.க.விலிருந்து விலகியுள்ளார்.

இறைச்சிக்காக மாடு, எருது மற்றும் ஒட்டகங்களை வெட்ட மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது. பா.ஜ.க ஆளாத மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, இந்த உத்தரவு குறித்து அரசு மறுபரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியானது.

மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த வருடம்(2018) சட்டசபை தேர்தல் வருகிறது. மேகாலயா மாநிலத்தின் காரோ மலைப் பகுதியை சேர்ந்தவர் பெர்னார்ட் மாரக். இவர் பா.ஜ.க.வில் மேற்கு காரோ மாவட்டத்தின் தலைவர் பொறுப்பில் உள்ளார்.

மேகாலயாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் மக்களுக்கு குறைந்த விலையில் மாட்டிறைச்சி கிடைக்க வழிவைக் செய்யப்படும் என்று பெர்னார்டு வாக்குறுதி அளித்தார். பெர்னார்டின் இந்த பேச்சு அக்கட்சியினரிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மத்திய அரசின் கால்நடை விற்பனை விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைவர் பெர்னார்டு கட்சியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் விலகினார். இந்நிலையில், பா.ஜ.க.வின் வடக்கு காரோ மாவட்டத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் பாச்சு மாரக் நேற்று அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

மாட்டிறைச்சி என்பது தங்களது கலாச்சாரத்தில் இருப்பது எனவும், அதற்கு துரோகம் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடித்தத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் மராக் தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பந்தன் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த மஹிந்த

wpengine

எமக்காக பேசியவரை விமர்சிக்காதீர்கள்

wpengine

கொலன்னாவை பள்ளிவாசல்களை புனர்நிர்மாணம் செய்ய முஸ்லிம் விவகார அமைச்சு நிதியுதவி செய்யவில்லை- மரிக்கார்

wpengine