Breaking
Sun. Nov 24th, 2024

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கை அரசியல் கலாசாரத்தின் மாண்பு மிக்க மாற்றத்திற்கான புதிய வழி தேடும் ” மாா்ச் 12 இயக்கம்” எமது நாட்டுப் பிரஜைகளின் வகிபங்கை வலுவாக்கி சாதுரியமான வாக்காளரை உருவாக்குவதற்கு தன்னை அர்ப்பணித்து தகுதியானவா்களுக்கு மட்டும் வேட்பு மனுக்கள் வழங்கவும். என அரசியல் கட்சிகளை வலியுறுத்தி நாடளாரீதியில் நடைமுறைப்படுத்தப்படும்  ” மாசற்ற அரசியல் செயற்பாடு ” Clean Politician ”   தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குராப்பண வைபவம்  2017 மாா்ச் மாதம் 13 ஆம் திகதி மு.ப. 09.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளது.

இவ் விடயமாக நேற்று(2) கொழும்பு ரேனுகா ஹோட்டலில் ஊடக நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தம் கூட்டமொன்று நடைபெற்றது. அக் கூட்டத்திலேயயே மேற்படி மாா்ச் 12 இயக்க உறுப்பினர்கள்  தகவல்களைத் தெரிவித்தனா்.

எதிா்வரும் உள்ளுராட்சித் தோ்தலில் தமது பிரநிதிகளை தெரிவு செய்யும் மக்கள் மாசற்ற  அரசியல் வாதிகள், ஒழுக்கமற்றவா்கள், மக்களுக்கு பணம், பொருள் கொடுத்து வாக்குகளைப் பெறுபவா்கள். கடந்த காலத்தில் லஞ்சம் ஊழல் அரச சொத்துக்களை கையாடல், குற்றமிழைத்தவா்களை அரசியல் கட்சிகள் தோ்தலில் வாக்கு கேட்பதற்கு நியமித்தால் அதனை பொது மக்கள் எதி்ர்க்க  வேண்டும்.  எதிா்காலத்தில் சிறந்த சிந்தனையாளா்கள், மக்களுக்காக மக்களோடு சோ்ந்து சேவை செய்யும் பிரநிதிகளையே தெரிவு  செய்ய வேண்டும். இந்த நிலை மாகாண சபை , பாராளுமன்ற உறுப்பினர்கள்  தெரிவு முன்னனெடுக்க வேண்டும்.

இதற்காக 2015 மாா்ச் 12 என்ற இயக்கம் ஆரம்பித்து அதில் இந்த நாட்டில் உள்ள சகல கட்சிகளின் தலைவா்கள் செயலாளா்கள் ஒப்பமிட்டுள்ளனா். இதனை முன்னெடுத்து எமது நாட்டில் உள்ள அசிங்கமான களவான தமது வாக்குக்காக கூடிய தொகைகளை செலவழித்து விளம்பரம் பொருள் உதவி வழங்கும் அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டும்.

இவ் ்இயக்கம் நாடாளரீதியில் இவ்  நடவடிக்கை முன்னெடுக்க உள்ளது. இதில் பெப்ரல் அமைப்பின் தலைவா், சர்வோதய உறுப்பிணா்கள், சனச கூட்டுவரவு  சிரேஷ்ட  ஊடகவியலாளா் சான் விக்கிரமசிங்க  போன்ற  அரசியலற்ற உறுப்பினர்கள் இந் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனா்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *