Breaking
Mon. Nov 25th, 2024
(அனா)
மட்டு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபா செலவில் மெரைன் ரைவ் வீதி, 6 மில்லியன் ரூபா செலவில் மீன்பிடி இலாகா வீதி மற்றும் 2 மில்லியன் ரூபா செலவில் டெலிகொம் வீதியின் கபூர் ஒழுங்கை வீதிஆகிய வீதிகளுக்கு செப்பனிடும் பணிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் செயலாளர் சர்வேஸ்வரன் தலைமையில் 2016.08.03ஆந்திகதி (புதன்கிழமை) கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலப்பத்தி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்…

காத்தான்குடி பிரதேசத்திற்கு முதலமைச்சரினூடாக பாரிய நிதிகளை கொண்டுவருவதற்குரிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இன்று மட்டும் நாங்கள் 1 கோடி 80 இலட்சம் ரூபா வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்து அவ்வேலைகளை ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். நேற்று காத்தான்குடி தள வைத்தியசாலை அபிவிருத்திக்காக 1கோடி 75 இலட்சம் ரூபாவும் ஒதிக்கீடுகளை மேற்கொண்டு அதற்கான வேலைகளை ஆரம்பித்து வைத்தோம்.

ஒவ்வொறு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒரு தொகை பணம் ஒதுக்கப்பட்டது. கடற“கரை வீதியினை செப்பணிடுவதற்காக மேலதிகமாக 10 மில்லியன் ரூபாவினை முதலமைச்சர் அவர்கள் எனக்காக ஒதிக்கீடு செய்து தந்தார். இதில் என்னவென்றால் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முஸ்லிம் முதலமைச்சரை உருவாக்குகின்ற விடயத்தில் நானும் கைகோர்த்தேன் என்பதற்காக சந்தோசமடைகின்றேன்.

பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறைந்தளவில் காணப்பட்டதனால் முதலமைச்சரிடம் சென்று காத்தான்குடி கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதாது மேலதிகமாக இன்னும் நிதிகளை வழங்குமாறு கேட்டபோது முதலமைச்சருக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து எனக்கு மேலதிக ஒதிக்கிடுகளை வழங்கினார். அது மாத்திரமல்லாமல் காத்தான்குடியிலே இருக்கின்ற வீதிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் கடற்கரை வீதி, தீன் வீதி, அப்ரார் வீதி போன்றவற்றிற்கு நிதிகளை ஒதுக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

என்னென்ன அபிவிருத்திகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டுமோ அனைத்து அபிவிருத்திகளையும் நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம். இன்ஷாஅல்லாஹ் எங்களுடைய தலைவர் கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சினூடாக ஒரு பூங்கா ஒன்றினை 30 மில்லியன் செலவில் அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மேலும் பூநொச்சிமுனையில் தோணா அழகுபடுத்தலுக்காக 5 மில்லியன்களை தலைவரிடம் கேட்டுள்ளோம்.

அரசியல்வாதி இவ்வாறும் இருக்கலாம் என்பதற்காக என்னுடைய சொந்த நிதியில் இருந்து 62 இலட்சம் ரூபாய்களை செலவு செய்து பாம் வீதியினை செப்பனிட்டதன் பிறகு அந்த வீதிக்கு என்னுடைய பெயரை வைக்கும்படி சொன்னார்கள் நான் அதற்கு சொன்னேன் என்னுடைய பெயரை வைப்பதற்காக நான் அந்த வீதியை போடவில்லை ஒரு அரசியல்வாதி இவ்வாறும் இருக்கலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அதனை செய்துள்ளேன். அதற்கு என்னுடைய பெயரை வைக்கமாட்டேன் என்று கூறியிருந்தேன். எங்களுடைய முதலமைச்சர் சொன்னார்கள் கிட்டத்தட்ட 5600 மில்லியன் எங்களுடைய மாகாணத்திலே பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக நிதிகளை கொண்டு வந்துள்ளோம். அவ்வாறு பெயர் வைப்பதாக இருந்தால் காத்தான்குடியிலே கிட்டத்தட்ட 10 பாடசாலைகளுக்கு முதலமைச்சருடைய பெயரையும், விரும்பினால் எனது பெயரையும் வைக்க முடியும்.

ஏன் கல்குடாவில் வைக்க முடியும் ஏறாவூரில் வைக்க முடியும் கிட்டத்தட்ட கிழக்கு மாகாணத்திற்குள் வருகின்றபொழுது இங்கு இருக்கின்ற அத்தனை பாடசாலைகளும் முதலமைச்சரும் அந்தந்த ஊரிலுள்ள அரசியல்வாதிகளினுடைய பெயர்களையும் வைக்கமுடியும் பார்க்கின்ற மற்றவர்கள் இவைகள் தமது சொந்த பணத்தில் கட்டி கொடுத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். அடிக்கடி முதலமைச்சர் அவர்கள் கேட்பார்கள் மக்களுடைய பணத்தை எடுத்து மக்களுக்கு சேவை செய்துவிட்டு தன்னுடைய பெயரை வைப்பதற்கு வெட்கமில்லியா என்று. தன்னுடைய சொந்த நிதியில் மக்களுக்கு சேவை செய்துவிட்டு அவர்களுடைய பெயரை வைக்கட்டும். அரச நிதி என்பது மக்களுடைய பணம் அந்த பணத்தில் தங்களுடைய பெயரை வைக்கின்ற கேவலமான அரசியலை செய்யக்கூடாதென்று முதலமைச்சர் அடிக்கடி சொல்வார்.

மாகாண சபை உறுப்பினர் என்கின்ற அடையாளம் ஒரு சிறிய அரசியல் அதிகாரம் எங்களுடைய முதலமைச்சர் எங்களுடைய கட்சியினூடாக எங்களுக்கு உதவி செய்யக்கூடிய ஒருவராக இருப்பதன் காரணத்தினால் தொடர்ச்சியாக எல்லா அபிவிருத்திகளையும் செய்து கொண்டிருக்கின்றோம். கிட்டத்தட்ட 6.5 கிலோமீட்டர் காபட் வீதிகள் காத்தான்குடியில் போடப்படவுள்ளன. காங்கயண்ணோடையில் கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபாய் செலவில் பிரதான வீதியை செப்பனிட உள்ளோம்.

அன்மையில் மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்ற எல்லை நிர்ணய வட்டார பிரிப்பு சம்மந்தமாகவும் கொழும்பிலிருந்து அதற்கான ஆணைக்குழு வந்திருந்தது. மண்முணை வடக்கு மாநகர சபையிலே ஒரு பிரதிநிதி வருவது வழக்கம். ஆனால் இம்முறை திட்டமிட்டு அப்பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்திருந்தார்கள். வட்டாரம் பிரிக்கின்றபொழுது 900 குடும்பங்கள் தமிழ் குடும்பங்களும் 500க்கும் குறைந்த முஸ்லிம் குடும்பங்களையும் சேர்த்து வட்டார பிரிப்பினை செய்வதினூடாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்திருக்கின்றார்கள். மனிதன் வாழாத எருமைத்தீவை புளியந்தீவுடன் இணைத்து அதனை ஒரு வட்டாரமாக மாற்றி இரட்டை அங்கத்துவர் பிரிவாக மாற்றியுள்ளார்கள். முஸ்லிம் பிரதிநிதித்துவம் வருவதற்கு எந்த சந்தர்ப்பமும் கிடையாது.c1d80117-460f-4368-8419-0d25e7ed240f
நாங்கள் எங்களுடைய உரிமையை விட்டுகொடுக்க முடியாது. நாங்கள் கேட்டோம் முஸ்லிம்கள் வாழ்கின்ற முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அந்த பகுதியினை திட்டமிட்டு இல்லாமல் செய்துவிட்டு மனிதன் வாழாத எருமைத்தீவினையும், புளியந்தீவினையும் வெறுமனே 17 முஸ்லிம் குடும்பங்கள் வாழுகின்ற இந்த பகுதியினை இரட்டை அங்கத்துவர் பிரிவாக மாற்றி இரண்டு தமிழ் பிரதிநிதிகளை எடுப்பதற்காக அங்கு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்திருக்கின்றார்கள் என்ற விடயத்தினை நாங்கள் சுட்டி காட்டிஇருந்தோம். அத்தோடு இதனை மாற்றி மஞ்சந்தொடுவாயினை இரட்டை அங்கத்தவர் வட்டாரமாக மாற்ற வேண்டும் எருமைத்தீவினை ஒற்ற வட்டாரமாக மாற்ற வேண்டுமென கேட்டிருந்தோம்.292d8e44-e79a-4f40-97c4-9c6279582fb8
இவ்வாறு அரசியல் உரிமைகளை பேசுகின்ற அரசியல் தலைமைத்துவங்கள் எங்களிடத்தில் இருக்க வேண்டும். வெறுமனே அபிவிருத்திகளை மாத்திரம் பேசிக்கொண்டிருக்கின்ற கண்மூடித்தனமான அரசியல் தலைமைகளாக நாங்கள் இருக்க மாட்டோம். கிட்டத்தட்ட மண்முணை வடக்கிலே வர்த்தமாணி பிரகாரம் 400 ஏக்கர் எங்களுடைய காணி இருக்கின்றது. அதேபோன்று மண்முணை பற்றுலே 192 காணி இருக்கின்றது. இவைகளைப்பற்றி யாரும் பேசுவது கிடையாது. என தனதுரையில் தெரிவித்தார்.17255923-29f8-40f3-9856-6482b8f98114
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலப்பத்தி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச்செயலாளர் முபீன் ஏனைய அதிதிகளாக காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சுக் அஹமட் லெப்பை, காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இல்மி அஹமட் லெப்பை மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.41af66b3-c4b4-4c98-9c8d-082abd86681c
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *