பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தல் ஒரே நாளில் நடாத்தப்படும்

9 மாகாணசபைகளின் தேர்தல்களும் ஒரேநாளில் தாமதமின்றி நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு நிர்வாகத்துறை அமைச்சர் வஜிர அபேவரத்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமது அமைச்சில் நேற்று பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் ஊடகங்களிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பொதுச் சொத்துக்கள் விரயம் செய்யப்பட்டு மாகாணசபை தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்பட்டன.

எனினும் அந்த முறையை மாற்றி இந்த அரசாங்கம் 9 மாகாணசபை தேர்தல்களையும் ஒருங்கே நடத்தவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

உதவி பிரதேச செயலாளர் 7ஆண்களை பாலியல் பலாத்காரம்

wpengine

வவுனியாவில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

wpengine

அநுர அரசிடம் மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை…!

Maash