பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தலிலும் கலப்பு முறை பைசர் முஸ்தபா

மாகாண சபைகளுக்கான தேர்தல் கலப்பு முறையில் நடத்துவதற்கு வழிவகுக்கும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுக் கூடியது. இதன்போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதற்கான யோசனையை அமைச்சரவையில் ஒப்புதலைப் பெறுவதற்காக சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி மாகாண சபைகளுக்கு 60 சதவீதம் தொகுதிவாரியாகவும், 40 சதவீதம் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படும் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, புதிய முறைமைக்கான எல்லை மீள்நிர்ணய பணிகள் பூர்த்தியடைந்த பின்னரே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதென அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

எல்லை மீள் நிர்ணயங்களை மேற்கொள்வதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் சகல அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடத்திவிட்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை மட்டும் பழைய முறைமையின் கீழ் நடத்துவதற்கு எதிர்ப்புகள் வலுத்ததையடுத்தே புதிய முறைமையின் கீழ் அதையும் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் இராணுவத் தளபதியான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கலந்து கொண்டபோதிலும் அவர் குறித்த விவகாரம் பேசப்படவில்லை. அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

கருணாவின் மனைவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். இதன் போது செருப்படியும்

wpengine

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம்! கல்முனை மக்களை சூடாக்க வேண்டாம் ஹரீஸ்

wpengine

கல்முனையில் தமிழ்பேசுவோர் எவரும் இல்லையா? கல்முணை யா?

wpengine