பிரதான செய்திகள்

மாகாணத்திற்கு பெருமை சேர்த்த 18வயது வீரர்

88 ஆவது சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் நாளில் பதக்கங்களை வென்று யாழ். மகாஜனா கல்லூரி வீர, வீராங்கனைகள் வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்தனர்.

18 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் மூன்று இடங்களையும் மகாஜனா கல்லூரி வீரர்கள் கைப்பற்றினர்.

88 ஆவது சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமாகின.
இன்று காலை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் சுரேஷ்குமார் சுகிஹேரதன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

போட்டியில் அவர் 4 மீட்டர் உயரத்திற்குத் தாவி ஆற்றலை வௌிப்படுத்தியிருந்தார்.
அதே அளவு உயரத்திற்குத் தாவி ஆற்றலை வெளிப்படுத்திய மகாஜனா கல்லூரியின் மற்றொரு வீரரான சிவசாந்தன் ஜேம்ஸன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

3.60 மீட்டர் உயரத்திற்குத் தாவிய ஆசிர்வாதம் ஜினோஜனுக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.
மகளிருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மகாஜனா கல்லூரியின் சி.ஹெரீனா வெள்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.

இதேவேளை, 16 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான குண்டெறிதல் போட்டியில் 14.55 மீட்டர் ஆற்றலை வெளிப்படுத்திய ஹார்ட்லி கல்லூரியின் எஸ்.மிதுன்ராஜ் வெண்கலப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

Related posts

சமூக எடைக்குள் சமூக இடைவெளி, கொரோனா சுமக்கப்போகும் பெறுபேறுகள்!

wpengine

சேதமடைந்த சான்றிதழ்களை விரைவில் மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

wpengine

மாடுகளை வெட்ட தடை: மேகாலயா மாநிலத்தில் பா.ஜ.க.விலிருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்

wpengine