பிரதான செய்திகள்

மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் தாமதமின்றி நடத்த வேண்டும்

அனைத்து மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் தாமதமின்றி நடத்த வேண்டும் எனத் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்தில் நேற்று (19.02) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த நேரத்திலும் எந்தவொரு தேர்தலுக்கும் தயாராக உள்ளது. தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் தீர்மானிக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தம்மைப் பலப்படுத்திக் கொண்டதன் பின்னர் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

இந்த தேர்தல் முறைமையின் கீழ் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்காமல் வெற்றி பெறுவது கடினம். மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தும் என நம்புகின்றேன். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் சில சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது முடிவாகும்” என்றார்.

வடமாகாண யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

”மனித உரிமைகள் தொடர்பான தெரிவுக் குழுவின் அறிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதி நவாஸ் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அது செயற்படுத்தப்பட வேண்டும். மேலும், வவுனியா மாவட்டத்தில் உள்ள தொழில் அலுவலகத்தில் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளேன்.

Related posts

இனவாதம் பேசும் சிறீதரனுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

இலங்கை அணியினை நோக்கி இங்கிலாந்து அணிக்கு 255

wpengine

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் “ஒட்டுனிகள்” ஆதரவளிப்பதில்லை

wpengine