தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

மஹிந்த, மைத்திரி பேஸ்புக் like போட்டி மீண்டும் மைத்திரி

இலங்கையில் அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகள் கடும் போட்டி போடுகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளுக்கு இடையில் பேஸ்புக்கில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதில் பாரிய போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்கள் வரை பிரதான சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆதிக்கம் செலுத்திய மஹிந்தவை பின்தள்ளி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பெற்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இலங்கையில் அதிகமான மக்கள் விரும்பம் வெளியிட்டுள்ள அரசியல்வாதியின் பேஸ்புக் கணக்காக மாறியுள்ளது.

இதுவரை அந்த இடத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே கைப்பற்றியிருந்தார். இந்த நிலையில் அவரை பின்னுக்கு தள்ளவிட்டு ஜனாதிபதி அந்த இடத்தை பிடித்துள்ளார்.unnamed

அதற்கமைய தற்போது வரையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் 1,070,7416 விருப்பங்கள் (Likes) வெளியிடப்பட்டுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பேஸ்புக் கணக்கில் 1,066,405 விருப்பங்கள் (Likes) வெளியிடப்பட்டுள்ளது.unnamed-1

Related posts

பிரதி,இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ

wpengine

இளம் கண்டு பிடிப்பாளர் யூனூஸ்கானுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஷிப்லி பாறுக்

wpengine

படுகொலை குற்றச்சாட்டு! பிரதி ஜனாதிபதி 15வருட சிறைத்தண்டனை

wpengine