பிரதான செய்திகள்

மஹிந்த பத்து கட்சிகளுடன் கூட்டு ஒப்பந்தம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்து கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தல் மற்றும் எதிர்கால தேர்தல்களை இலக்கு வைத்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யாத ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இவ்வாறு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மவ்பிம மக்கள் கட்சி, லங்கா தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, முஸ்லிம் உலமா கட்சி, லிபரல் கட்சி, புதிய சிஹல உறும, பூமிபுத்ர கட்சி, ஜனநாயக தேசிய அமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இவ்வாறு தாமரை மொட்டு கட்சியுடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளன.

Related posts

பண்டிகை காலத்தையொட்டி பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்!

Editor

தனிநபர் முற்பண வருமான வரி பாரிய அளவில் அதிகரிப்பு!

Editor

180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்

wpengine