பிரதான செய்திகள்

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி உருவாக்க நாமல் கடும் முயற்சி

மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுமென முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். 

வன்முறையை  முன்னெடுப்பவர்கள், சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டுபவர்கள் மீது  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சட்டத்தை பிரயோகித்திருந்தால், இன்று இதனை விட நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். எனினும், ரணில் விக்ரமசிங்க  அதனை மேற்கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். 

தமது அரசியல் கட்சியின் பலம் தாம் எதிர்பார்க்காத வகையில் அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஸ, அமைப்பு முறைமையை (System) மாற்றுவதாகக் கூறி ஆட்களை மாற்றியதுதான் தமது கட்சி செய்த தவறு எனவும் குறிப்பிட்டார். 

நாட்டின் பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றிணைந்தால், அமைப்பு முறையில் மாற்றம் கண்ட நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என அவர் கூறினார். 

அவ்வாறான யுகத்திற்கு நாட்டைக் கொண்டு செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை பொதுஜன பெரமுன என்ற ரீதியில் பெற்றுத் தருவதாகவும் அவர் தெரிவித்தார். 

புதிய கூட்டணியை மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் கட்டியெழுப்பவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ மேலும் கூறினார். 

Related posts

எரிபொருள் தட்டுப்பாடு அமைச்சர்கள் விமானத்தில் பறக்க முடியாது.

wpengine

பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிப்பு

wpengine

சந்திரிக்காவை சந்தித்த ரவி கருணாநாயக்க

wpengine