பிரதான செய்திகள்

மஹிந்த – கட்சித் தலைவர்கள் இடையே முறுகல்? உண்மை நிலை என்ன?

இன்று (19) கூட்டப்பட்ட அரசாங்கக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்தார்.அமைச்சர்கள் வாசுதேவ நானாயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வெளிநடப்பு செய்ததாக சில ஊடகங்களில் வெளியான அறிக்கைகளில் உண்மை இல்லை என பிரதமரின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் அரசாங்கக் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு சீர்குலைந்துவிட்டதாக’மொட்டு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இது தொடர்பான அறிக்கை ‘மவ்ரட’ இணையதளத்தில் ‘அரசாங்கத்திற்குல் நெருக்கடி அதிகரிக்கிறது: ‘பிரதமர் கட்சித் தலைவர்களின் கூட்டம் சீர்குலைந்தது’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது, இதேபோன்ற செய்தி அறிக்கை ‘லங்கா சி நியூஸ்’ வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தி அறிக்கைகள் குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஊடக பிரிவு அதிகாரி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசாங்க கட்சி தலைவர்கள் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று காலை பிரதமருடன் நற்புரவு சந்திப்பொன்றை நடத்திவிட்டு வெளியேறினர்.

விமல் வீரவன்சவுடன் கட்சித் தலைவர்கள் வாசுதேவ நானயக்கார, உதய கம்மன்பில, டிரான் அலெஸ் மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் இருந்தனர்.

பசில் வேலையை சிக்கலாக்கினாரா?

மாகாண சபை தேர்தல் முறை தொடர்பாக மொட்டு கட்சிக்கும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதில் தலையிடுமாறு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதமரிடம் கோரிக்கை  ஒன்றை விடுத்திருந்தார்.

முதல் கட்டமாக, விமல் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி பிரதமரிடம் கோரியிருந்தார். அதன்படி இன்று (19) விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவுடன் கலந்துரையாட பிரதமர் திகதியை நிர்ணயித்திருந்தார்.

இந்த கலந்துரையாடலின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு (18) விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இச்சந்திப்பில் வாசுதேவ நானாயக்கார, உதய கம்மன்பில, டிரான் அலெஸ், அசங்க நவரத்ன, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜி.வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போது, ​​பிரதமருடன் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல் குறித்து பிரதமரின் காரியாலயத்திளிருந்து யோஷித ராஜபக்ஷ அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பிரதமருடன் இன்று  நடைபெறவுள்ள கலந்துரையாடல் பற்றி பேசப்பட்டுள்ளது.

அங்குதான் சுமார் 50 அரசு கட்சி பிரதிநிதிகளை கூட்டத்திற்கு பசில் ராஜபக்ஷ அழைத்திருப்பது தெரியவந்துள்ளது.

அந்த நேரத்தில், விமல் வீரவன்சவும் அவரது குழுவும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என உடனடியாக முடிவு செய்ததோடு, பிரதமருக்கு தகவல் தெரிவிக்குமாறு யோஷிதா ராஜபக்ஷவிடம் கூறியுள்ளனர்.

அதன்படி, இன்று காலை 9.00 மணிக்கு முன்னதாக அவர்களை சந்திக்க யோஷித ராஜபக்ஷ மூலம் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவுக்கு பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று காலை பிரதமரை சந்தித்த அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அவரது குழுவினர் பிரதமருடன் விசேட கலந்துரையாடலுக்கு தங்களுக்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை நடைபெறவுள்ள கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் கூறியுள்ளதோடு, விமல் உள்ளிட்ட குழுவுக்கு விரைவில் திகதி வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

அதன்படி, பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர், அவர்கள் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினர்.

இருப்பினும், இன்று காலை மொட்டு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு எம்.பி.க்கள் குழு இன்று மாலை சந்திக்கும்

இதற்கிடையில், ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் அவசரக் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (19) மாலை 6.30 மணிக்கு அலரி மாளகையில் இடம்பெறவிருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலயம் தொடர்பான விசேட ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போர்ட் சிட்டி மசோதா தொடர்பான சர்ச்சை காரணமாக இன்று பிற்பகல் கூட்டத்தை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்றைய அரசாங்க கட்சி கூட்டத்தில் அரசாங்கத்தில் இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை வலியுறுத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை பிரதமரை சந்தித்த அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது குழு இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளது.

Related posts

மாட்டிறைச்சியினை கோருபவர்கள் மதுபானசாலை போன்றவற்றைத் தடை செய்யவும் கோர வேண்டும்.

wpengine

பிரதமருக்கும் ஷிராஸ் யூனுஸ்சுக்கும் எந்த வித தொடர்பில்லை

wpengine

பவித்ரா வன்னியாராச்சிக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

wpengine