பிரதான செய்திகள்

மஹிந்த அணி கொழும்பில் மந்திர ஆலோசனை! சம்பந்தனுக்கு வரப்போகும் ஆப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு 7 விஜேராத மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 9ம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த பருவகாலத்திற்கான அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வின் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடு குறித்து இன்று கலந்துரையாடலில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சமகால அரசியல் விடங்கள், அரசாங்கத்திலிருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணைவு மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ள யோசனை உள்ளிட்ட பல்வேறு விடங்கள் இன்றைய கலந்துயாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

முதற்கட்டமாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக தம்மை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணி கோரவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமகால அரசாங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளது. இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் தென்னிலங்கை இனவாதிகளால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மாற்றும் நடவடிக்கைக்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டுபாயின் பிரதி ஆட்சியாளரின் மறைவு இலங்கை மக்களுக்கு வேதனை தருகின்றது’ – தலைவர் ரிஷாட்!

wpengine

கிளிநொச்சி செல்வா நகரில் அரைக்கும் ஆலை திறந்து வைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசாங்கம்

wpengine