Breaking
Thu. Nov 21st, 2024

கூட்டு எதிரணியில் உள்ள உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்­தால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமை­யிலான தனி அரசு அமைக்க தயாராக இருக்கின்றேன். இவ்வாறு நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன.
ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்­துள்ள கூட்டு அரசிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறினால் அந்தக் கட்சியுடன் இணையலாம் என்று மகிந்த அணி நிபந்தனை விதித்திருந்த நிலையி­லேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்­ளது.

இரத்தினபுரியில் நடந்த மக்கள் சந்திப்பி­லேயே அரச தலைவர் மைத்திரிபால சிறி­சேன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்­ளார்.

“2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை­யிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி­யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 96 பேரும் என்னுடன் ஒரே அணியில் இருப்­பார்களேயானால் நாளையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசை அமைப்பதற்குத் தயாராக உள்ளேன்”- என்று அவர் கூறி­யுள்ளார்.

“சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசை அமைப்­பதாயின் ஒன்றிணையத் தயார் என்று சிறி­லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் வேறு கட்சி அமைத்துக் கூறிவருகின்ற­னர். அவர்கள் அந்தக் கட்சியை கைவிட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்றி­ணைய முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றேன்.

எனது உடலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி­யின் குருதியும் ஊழல் மோசடி மற்றும் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிரான குருதி­யுமே இருக்கின்றது. இன்று நான் நடவ­டிக்கை எடுத்து வருவது சிறிலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக அல்ல. ஊழல் மோசடிக்­கும் குடும்ப ஆதிக்கத்துக்கும் எதிராகவே­யாகும்.”- என்றும் அவர் கூறியுள்ளார்.

மகிந்த தலைமையிலான கூட்டு எதிரணி­யையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை­யும் ஒன்றிணைப்பதற்கான பேச்சுக்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் முன்னெ­டுக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவேண்டும் என்றால், ஐக்­கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசு உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று மகிந்த அணி நிபந்தனை விதித்தி­ருந்தது. சுதந்திரக் கட்சி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இரு தரப்பின் இணைப்பும் சாத்தியமில்லாது போயி­ருந்தது.

அண்மையில் பிணைமுறி விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் சுதந்தி­ரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது. அது நாளுக்கு நாள் வலுவடைகின்றது. இந்தப் பிண்ணனியில் அரச தலைவர் இவ்­வாறு கூறியுள்ளமை கொழும்பு அரசி­யலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *