பிரதான செய்திகள்

மஹிந்தவை பழி தீர்க்க! பல கோடிகளை கடலில் போடும் ரணில்,மைத்திரி

கடந்த 40 வருடங்களாக இலங்கை ஜனாதிபதிகளால் பயன்படுத்தப்பட்ட குண்டு துளைக்காத மோட்டார் வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கொண்டு வரப்பட்ட 25 குண்டு துளைக்காத மோட்டார் வாகனங்கள் செயலிழக்க செய்யப்படவுள்ளன.

மெர்சீடிஸ் பென்ஸ் மற்றும் ஜகுவர் ரக வாகனங்களில் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்காக (கருணா) கொண்டுவரப்பட்ட டொயோட்ட லேன்ட் க்ருஸர் வாகனம் உள்ளடங்குகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்சவினால் இந்த குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிக்கும் நடவடிக்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களின் தொலைத்தொடர்பு மற்றும் ஏனைய பொருட்கள் நீக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்தால் பாதாள உலக குழுவினர் கொள்வனவு செள்வதற்கு வாய்ப்புகள் உள்ளமையினாலேயே இந்த வாகனங்களை கடலில் வீச தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் பல வருடங்கள் பழைமையான இந்த வாகனங்களை பழுது பார்ப்பதென்றால் பாரியளவு பணம் செலவிட நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.

Related posts

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வன்னியில் கட்டுப்பணம்

wpengine

மதகுருமார்களையும், அடிப்படைவாதிகளை வைத்து அரசிலமைப்பு! குப்பையில் போட வேண்டும்

wpengine

சுதந்திரத்தின் அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத சூழ்நிலை

wpengine