பிரதான செய்திகள்

மஹிந்தவை காப்பாற்றும் ரணில் இரகசியஒப்பந்தம்

ஊழல் மோசடிகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவருடன் இரசிய ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.

“முன்னாள் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை இருந்தும் வெரும் 47 இடங்களை வைத்துக்கொண்டுதான் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்திருந்தேன். என்னால்தான் ரணிலின் அரசு கவிழாமல் பாதுகாக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்கு நான்தான் தடையாக இருப்பது போன்று சித்தரிக்கப்படுகின்றது. இந்த முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், மகிந்த ராஜபக்சவை காப்பற்றும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக” அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா கிராம சேவையாளர் லஞ்சம்! ஆணைக்குழு கைது

wpengine

பாடசால பாலியல் துஷ்பிரயோகம்  – 1929 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு.

Maash

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் முஜிபுர் ரஹ்மான்

wpengine