முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கீழ் நடைபெறும் அடுத்த தேர்தலுக்கு ஆதரவு வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இணைந்த பின்னர், இரத்தினபுரி குருவிட்ட நகரில் இன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் நாட்டில் ஒரு வித இருண்ட யுகம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு கட்சிகளுக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத காரணத்தினால் பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது பலவீனமான நிலைமைக்கு சென்றுள்ளது.நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பலர் சதி செய்தனர்.
இதில் கட்சியின் பொதுச் செயலாளரும் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும் ஜோன் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.