பிரதான செய்திகள்

மஹிந்தவுக்கும்,கோத்தாவுக்கு விரிசல்! ஜனாதிபதி வேற்பாளர் யார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச, ராஜபக்ச அணியில் கவர்ச்சிகரமான தலைவராக மாறி வரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


மகிந்த ராஜபக்சவின் இந்த அறிவிப்பு கோத்தபாய ராஜபக்சவின் அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளதாக நம்பிக்கையான அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தயாராக இருக்குமாறு பசில் ராஜபக்ச, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர் தேர்தலில் போட்டியிடுவதில் தடையேற்படும் என்ற சந்தேகம் காரணமாக, இவ்வாறு மாற்று வேட்பாளர்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மெதமுலன டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகம் சம்பந்தமான வழக்கு நாளை முதல் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுக்கப்படவிருந்தது. எனினும் உயர் நீதிமன்றம் விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த விசேட கோரிக்கை மனுவை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் புவனேக அலுவிகார, காமினி அமரசேகர, எஸ்.துரைராஜா ஆகியோர், விசேட மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒக்டோபர் முதலாம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த கோத்தபாய ராஜபக்ச நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினர். வெளிநாட்டில் தங்கியிருக்க கோத்தபாய ராஜபக்சவுக்கு விசேட மேல் நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்காலம் நேற்றுடன் முடிவடைந்திருந்த நிலையிலேயே அவர் நாடு திரும்பியிருந்தார்.

Related posts

இனவெறி சம்மந்தமான பேஸ்புக் லைக்! நீதி மன்றம் அளித்த தீர்ப்பு

wpengine

மஹிந் 2022 ஆண்டு, இலங்கையில் “நாவலர் ஆண்டு” ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது:

wpengine

சமூர்த்தி நிவாரணம் கோரி மூதூர் கிழக்கு-மேற்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

wpengine