பிரதான செய்திகள்

மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ – டட்யனவும் இன்று திருமணபந்தத்தில் இணைந்துகொண்டனர்.
குறித்த திருமண நிகழ்வு இன்று 24.01.2019 வியாழக்கிழமை தங்காலையிலுள்ள வீரகெட்டியவில் இடம்பெற்றது.

இந்நிலையில் தனது சகோதரரின் திருமணத்திற்கு நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு திருமண பந்தத்தில் இணையவிருந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், வியாபாரிகள், கலைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், வீரகெட்டிய மக்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரணிலுக்கான அமைச்சரவை பத்திரம் வாபஸ்

wpengine

தாஜூதீன் படுகொலை முன்னாள் பொலிஸ் மா அதிபர் நழுவிக்கொள்ள முடியாது- ரஞ்சன் ராமநாயக்க

wpengine

மோட்டார் சைக்கிளில் சென்று மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த அமைச்சர் றிசாத் (Video)

wpengine